பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-21 15:23 GMT

விருதுநகர்

விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் ஊதிய விகிதங்களை அமலாக்க வேண்டும். நேரடி நியமன முறை ஓய்வுதியங்களை இறுதி செய்ய வேண்டும். தேவையான காலிப்பணியிடங்களுடன் துறை தேர்வு நடத்த வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் என்.எப்.டி.இ. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் கூட்டமைப்பின் அமைப்பாளர் குருசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மேலும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இறுதியில் ஜெயக்குமார் நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்