பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-07 19:25 GMT


பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.எப்.டி.இ. சங்க மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊழியர்களுக்கு கடந்த 2017 முதல் வழங்க வேண்டிய 3-வது ஊதிய மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் உடனடியாக 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்