மரவள்ளி பயிரைத் தாக்கும் பழுப்பு நோய்- விவசாயிகள் கவலை

வாணாபுரம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு பயிரில்பழுப்பு ேநாய் தாக்குவதால் இலைகள் உதிர்ந்து வருகின்றன.

Update: 2023-09-08 10:06 GMT

வாணாபுரம்

வாணாபுரம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு பயிரில்பழுப்பு ேநாய் தாக்குவதால் இலைகள் உதிர்ந்து வருகின்றன. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் நோயை தடுக்க வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்க விடுத்துள்ளனர்.

மரவள்ளி

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களையும் பருவ கால பயிர் என பூக்கள் மற்றும் காய்கறி வகையான பயிர்களையும் பயிரிடப்பட்டாலும் பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, தச்சம்பட்டு, வெறையூர், விருதுவளங்கினான், மழுவம்பட்டு, பேரையாம்பட்டு, பழையனூர், நவம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான எக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்ப்பட்டுள்ளது.

5 மாதம் ஆன நிலையில் நன்றாக செழித்து வளர்ந்த மரவள்ளி தற்போது பழுப்பு நோய் தாக்குவதினால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. மேலும் இலைகள் முழுவதும் கருகி உதிர்ந்து வருகிறது. இதனால் வளர்ச்சி குறைவாகவும் காணப்படுகிறது.

ஆலோசனை வழங்க வேண்டும்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''இப்பகுதியில் பெரும்பாலும் மரவள்ளி பயிர்கள் பயிரிடப்பட்டு பராமரித்து வரும் நிலையில் 5 முதல் 6 மாதங்கள் ஆன நிலையில் பயிர்கள் திடீரென பழுப்பு நிறத்தில் மாறி வருகிறது. மேலும் இலைகள் முழுவதும் காய்ந்து விழுந்து விடுகிறது.

சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் இலைகள் துளிர்த்தாலும் கிழங்குகளின் தரம் மிகவும் குறைவாகவும் வளர்ச்சி இல்லாமலும் இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நாங்்கள் சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் மரவள்ளி கிழங்கு பயிரை நேரடியாக ஆய்வு செய்து அதற்கு தெளிக்க கூடிய மருந்துகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்