மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து அண்ணன்-தம்பி படுகாயம்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து அண்ணன்-தம்பி படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன்கள் ராஜா (வயது28), முருகானந்தம் (23). சகோதரர்களான இருவரும் சம்பவத்தன்று ஒரே மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தனர். நாச்சிக்குளம் கிழக்கு கடற்கரை சாலை தனியார் பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.