சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பி கைது

சொத்து தகராறில் அண்ணனை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-01 18:34 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55), விவசாயி. இவரது தம்பி நேரு (50). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயலில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நேரு தனது அண்ணன் கணேசனை அருகே இருந்த கிணற்றில் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற நேருவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்