மாற்றுத்திறனாளி வாலிபரை கத்திரிக்கோலால் குத்திய தம்பி கைது

குத்தாலம் அருகே மாற்றுத்திறனாளி வாலிபரை கத்திரிக்கோலால் குத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-19 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே மாற்றுத்திறனாளி வாலிபரை கத்திரிக்கோலால் குத்திய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

குத்தாலம் தாலுகா சென்னிநல்லூர் கிராமம் கச்சார் தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன்கள் சுரேஷ்(வயது34).மாற்றுத்திறனாளி. சுதாகர்(32). அண்ணன் தம்பியான இவர்கள் 2 பேருக்கும் இடையே நேற்று முன்தினம் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர் அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து சுரேசை குத்தினார்.

கைது

இதில் அவருக்கு கால் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாாின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றர்.

Tags:    

மேலும் செய்திகள்