கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி
புதுக்கோட்டை அருகே கண்மாயில் மூழ்கி திருச்சிைய சேர்ந்த அண்ணன்-தம்பி பலியாகினர்.
ேகாடை விடுமுறைக்காக...
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வைரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர், கோவையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் அவரது மகன்கள் லோகநாதன் (வயது 12), தருண்ஸ்ரீ (8) ஆகியோர் வசித்து வந்தனர். இதில் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் லோகநாதன் 6-ம் வகுப்பும், தருண்ஸ்ரீ 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், கோடை விடுமுறைக்காக சொந்த ஊரான வைரம்பட்டிக்கு சுதா குடும்பத்துடன் வந்துள்ளார். இன்று இவரது மகன்கள் 2 பேரும் அப்பகுதியில் விளையாட சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து பதறிப்போன சுதா அப்பகுதியில் தனது மகன்களை தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
அண்ணன்-தம்பி பலி
இந்நிலையில், சுதா வீட்டின் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஒலியமங்கலம் ஊராட்சி சேர்வைக்காரன்பட்டி எத்தவேளாண் கண்மாய் கரையில் சிறுவர்களை தேடி உள்ளனர். அப்போது அவர்களது துணிகள் அங்கு கிடந்துள்ளது. இதையடுத்து கண்மாயில் பார்த்த போது அதில், ஒரு சிறுவனது உடல் மிதந்துள்ளன. இதைக்கண்ட சுதா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கண்மாயில் இறங்கி சிறுவனின் உடலை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர்.
பின்னர் மற்றொரு சிறுவனின் உடலையும் கண்மாயில் தேடினர். சிறிது நேரத்தில் அந்த சிறுவனின் உடலையும் மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து சுதா கதறி அழுதது அருகில் இருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.
சோகம்
இதுகுறித்து காரையூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் 2 பேரும் விளையாட சென்ற போது கண்மாயில் இறங்கி குளித்ததால் நீரில் மூழ்கி இறந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்த அண்ணன்-தம்பி 2 பேர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தியது.