குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

Update: 2023-01-14 18:45 GMT

கட்டுமாவடியில் குழாய் உடைந்து சாலையில் வீணாக குடிநீர் செல்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீணாகும் குடிநீர்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே நாகூர்-நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுமாவடியில் திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி அருகில் சாலையில் ஓடுகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் இன்னும் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

சரி செய்ய வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாகூர் - நன்னிலம் மெயின் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்