தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம்

தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-08-01 17:45 GMT

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில், "உலக தாய்ப்பால் வார விழா" விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் சென்றடைந்தது. இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்