கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டுள்ளன.

Update: 2023-07-04 19:56 GMT

லால்குடியை அடுத்த பம்பரம் சுற்றி கிராமத்தில் நாகப்பா சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தர்மராஜ் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த தர்மராஜ் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் தங்க நகை உள்ளிட்டவை திருட்டுபோய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்