கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு
கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டுபோனது.
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி முத்து(வயது 30). இவர் செல்போன் கடை மற்றும் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடைகளை பூட்டிவிட்டு சென்றார். இதையடுத்து நேற்று முன்தினம் வந்து பார்த்தபோது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கடைகளுக்குள் சென்று பார்த்தபோது, ரூ.25 ஆயிரம் ரொக்கம், ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வளநாடு போலீசில் முத்து அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.