காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து24 பவுன் நகை-பணம் கொள்ளை; மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-06 22:35 GMT

பெருந்துறை

காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 24 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விவசாயி

காஞ்சிக்கோவில் அருகே எல்லீஸ்பேட்டையில் வசித்து வருபவர் சாமிநாதன் (வயது70). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கிருந்த பீரோவும் திறந்திருந்தது. அதிலிருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.23 ஆயிரத்தை காணவில்லை.

நகை-பணம் கொள்ளை

இதுகுறித்து சாமியப்பன் காஞ்சிக்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். வீடு பூட்டி கிடப்பதை அறிந்த மர்மநபர்கள், கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை திறந்து அதிலிருந்த நகை-பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது அந்த வீட்டுக்குள் சென்று அங்கும் இங்கும் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்துவிட்டு் சென்றனர்.

நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்