வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடப்பட்டது.
ஒக்கூர்,
சிவகங்கை அடுத்த ஒக்கூர் புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் முதல்வராக பணிபுரிபவர் சீலி (வயது 62). சம்பவத்தன்று மாலையில் சீலி வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது மர்மநபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.