வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு போனது.

Update: 2023-07-09 21:11 GMT

திருச்சி கருமண்டபம் வைஷ்ணவிநகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி மாலினி (வயது 29). இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு சென்றார். பின்னர் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம், 2¼ பவுன் நகை மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவை திருட்டு போய் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்