வீட்டின் பூட்டை உடைத்து தங்கச்சங்கிலி திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து தங்கச்சங்கிலி திருட்டு போனது.

Update: 2022-08-31 17:52 GMT


புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 53). இவர் புதுக்கோட்டையில் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி திருட்டுபோகி இருந்தது. இதனை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டு தப்பிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு முருகேஸ்வரி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்