வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை திருட்டு

பேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்

Update: 2022-06-26 15:47 GMT

பேரூர்

கோைவயை அடுத்த பேரூர் தீத்திப்பாளையம், ஸ்டார் சிட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சர்மிளா (வயது 57).

இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது மகளின் வீட்டுக்கு சென்றார். அவர், அங்கிருந்தவாறு தனது வீட்டில் பொருத்திய கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை செல்போனில் பார்த்து வந்தார்.

ஆனால் திடீரென்று கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகள் இணைப்பு துண்டானது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனே வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 15½ பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்