தேனியில் தடையை மீறி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

தேனியில் தடையை மீறி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-14 16:47 GMT

ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டனர். மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் 6 மாதமாக உணவு தயாரிப்பு செலவின தொகை வழங்காததை கண்டித்தும், சத்துணவு ஊழியர்களுக்கு வேலை நிறுத்த கால ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.

அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்போது அவர்களுக்கு எதிராக போட்டி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக, அதே சங்கத்தின் பெயரில் உள்ள மற்றொரு தரப்பை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் சிலர் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.அப்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் மலர்விழி, மற்றொரு தரப்பினர் சங்கத்தின் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர்கள் போலீசாரின் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் உள்பட 147 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து மற்றொரு தரப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்