கோவில் உண்டியல் உடைப்பு; 2 பேர் கைது

கயத்தாறு அருகே கோவில் உண்டியல் உடைப்பு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-24 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் ஊருக்கு மேற்கே உள்ள மொட்டையச்சாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். மேலும் அங்கிருந்த 13-க்கும் மேற்பட்ட வெள்ளி காப்புகள், வெள்ளி வளையல்கள் மற்றும் உண்டியல் பணத்தை திருடிச் சென்றனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவையும் உடைத்து நொறுக்கினர். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா மொட்டையச்சாமி, கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோவில்பட்டி வள்ளுவர்நகரைச் சேர்ந்த காந்தாரி மகன் கனகராஜ் (வயது 30), கோவில்பட்டி புதுக்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் மாரியப்பன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்