மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தாடாளன் கோவில் மேற்கு வீதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் காலை உணவு வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், சுகாதார அலுவலர் ராம்குமார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால் வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 7 பள்ளிகளில் பயிலும் 126 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன், தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் பொன்முடி, மாவட்ட பிரதிநிதி காழி கலைவாணன், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மன்ற உறுப்பினர் நாகரத்தினம் நன்றி கூறினார்.