தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு 5½ கி.மீ. தூரத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் இரும்பு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழாயில் தண்ணீர் முழுமையாக செல்வதற்கு சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விஜயகரிசல்குளம் அருகே உள்ள பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகிலும், வெம்பக்கோட்டை துணை மின் நிலையம் அருகிலும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாக செல்வதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை சிவகாசி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சாகுல் ஹமீது, தலைமை கண்காணிப்பாளர் சித்திரைவேல், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் குழாய் உடைப்பை சரி செய்ய ஆலோசனை வழங்கினர்.