தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

சாத்தூர் அருகே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-25 19:04 GMT

சாத்தூர், 

சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தூர்-சத்திரப்பட்டி சர்வீஸ் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக நீர் கசிந்து வருகின்றது. இதனால் சாலையும் பெயர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் கசிந்து ஒவ்வொரு முறையும் நீர் வீணாகி வரும் நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்