கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

எமரால்டில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-18 18:45 GMT

மஞ்சூர், 

மஞ்சூர் அடுத்த எமரால்டு அணையில் இருந்து குன்னூர் மற்றும் வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மையம் ஆகிய இடங்களுக்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எமரால்டு போலீஸ் நிலையம் அருகில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது. மேலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் தண்ணீர் ஆறு போல் சாலையோரம் ஓடியது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்