கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
குத்தாலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
குத்தாலம்:
குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கங்காதரபுரம் ஊராட்சி ஆட்டூர் கிராமம் நண்டலாறு ஆற்றங்கரை வடக்கு தெருவில் மகாசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 31-ந்தேதி இந்த கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு, பின்னர் உண்டியலை அருகில் உள்ள ஆற்றங்கரையில் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.