கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

Update: 2023-08-28 09:19 GMT

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள தீபம் நகரில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சுங்கச்சாவடி அருகில் மெயின் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை அள்ளி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்