வீ்ட்டு கதவை உடைத்து பணம் திருட்டு

திருப்பத்தூர் அருகே வீ்ட்டு கதவை உடைத்து பணம் திருட்டப்பட்டது.

Update: 2022-07-05 18:42 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பூசணிக்களப்பகுதியைச் சேர்ந்தவர் சேவுகன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு காரைக்குடிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சேவுகனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீட்டிற்கு வந்த சேவுகன் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1 வெள்ளி குத்துவிளக்கு, 2 வெள்ளி டம்ளர் மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து சேவுகன் கொடுத்த புகாரின் பேரில் நெற்குப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்