பாலமுருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம்

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-16 19:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன்கோவிலில் முதலாம் ஆண்டு பிரமோற்வ விழா, வைகாசி விசாக தேர்திருவிழா முன்னிட்டு பல்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் தலைமை தாங்கினார். கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தார். செயல்அலுவலர் சங்கர் வரவேற்றார்.

கூட்டத்தில் வரும் 24-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதிவரை நடைபெறும் முதலாம் ஆண்டு பிரமோற்சவவிழா மற்றும் 2-ந் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் தேர் திருவிழாவை சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்படுகள், குடிநீர், சுகாதரா வசதி போன்ற அடிப்படை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் வாலாஜாபேட்டை தாசில்தார் நடராஜன், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, கீழ்மின்னல் ஊராட்சிமன்ற தலைவர் லட்சுமி தேவேந்திரன், வருவாய் ஆய்வாளர் பாரதி, மற்றும் போக்குவரத்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை தீயணைப்பு மீட்புதுறை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்