தேவகோட்டை
தேவகோட்டைபிராமணர் சங்கத்தின் சார்பாக சோபகிருது வருஷ பஞ்சாங்க படனம் வாசித்தல், வெளியிடுதல் நிகழ்ச்சி தேவி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. சோபகிருது வருஷ பலன்படி அனைத்து மக்களும் நலன் பெறுவார்கள், தேவையான அளவு மழை பெய்யும், விவசாயம் செழித்து தொழில்கள் சிறந்து விளங்கும் எனவும் பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கோவில் பட்டாச்சார்யார் ஜெகன்னாத ஐயங்காரும், மாவட்ட தலைவரும், தேவகோட்டை கிளை தலைவருமான ராமசுவாமி பஞ்சாங்க பலன்களை வாசித்தார். முதல் பஞ்சாங்கத்தை அப்ஸரா ராஜேந்திரன் பெற்றார். பிராமண சங்க செயலாளர் சங்கர், துணைத்தலைவர் சேகர் வரவேற்றனர். பொருளாளர் ரமேஷ் இனிப்பு வழங்கினார். சேஷன் வாத்யார், சந்தானம் ஐயங்கார், லோகநாதன், நீலாஸ் சுப்ரமணியன், விஷ்ணுவர்த்தன், வெங்கடேசன், கவுதம்சேஷாத்ரி, வெங்கட கிருஷ்ணன், பத்மவாசன், ஹரிஹரன் மற்றும் மகளிரணியை சேர்ந்த சித்ரா, பவித்ரா, ஐஸ்வர்யா, பத்மா, மாணிக்கவள்ளி, சுதா, பங்கஜம், தேவி, சிவகாமி, லெட்சுமி மற்றும் பலரும் கலந்துகொண்னர். முடிவில் பிராமண சங்க தலைவர் ராமசுவாமி நன்றி கூறினார்.