கும்மிடிப்பூண்டி அருகே சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே 18 வயதுடைய சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-12 12:02 GMT

18 வயது சிறுவன்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பள்ளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகன் கோபிநாத் (வயது 18) பிளஸ்-1 வரை படித்த நிலையில் பள்ளி படிப்பில் இருந்து நின்று விட்டார். பின்னர் கோபிநாத் வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பெற்றோர் கோபிநாத்தை ஏன் படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறாய் என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபிநாத் பெற்றோர் கண்டித்த மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் கோபிநாத் தூக்குபோட்டு கொண்டார். வீட்டில் உள்ள பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோபிநாத் தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கோபிநாத்தை மீட்டு சிசிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபிநாத் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்