சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மதுரை செல்லூர் மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). இவர் 16-வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது குறித்து குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.