தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை
தூக்குப்போட்டு சிறுவன் தற்ெகாலை செய்து கொண்டான்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் வசந்த் (வயது 17). இந்த நிலையில் முருகன், கலைச்செல்வி ஆகியோருக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் வசந்த் மற்றும் அவரது தங்கை ஆகிய 2 பேரும் பாட்டி காளியம்மாள் கண்காணிப்பில் வளர்ந்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று வசந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.