மாணவியை தாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மாணவியை தாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-08-18 19:02 GMT

வல்லம்

தஞ்சை அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 21). இவர், 15 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது தாய்விடம் கூறினார். இதையடுத்து மாணவியின் தாய், சுதாகரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுதாகரின் தாய் கலையரசி, மாணவியின் தாயை திட்டியுள்ளார். சம்பவத்தன்று மாணவி தனது தாயுடன் கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்து சுதாகர், மாணவியை தாக்கினார். இதை தடுக்க முயன்ற மாணவியின் தாயையும் அவர் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தில் சுதாகர் (21) மற்றும் அவரது தாய் கலையரசி (45) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்