(செய்தி சிதறல்) சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

லால்குடியில் சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-27 20:39 GMT

லால்குடியில் சிறுமியை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

8 மாத கர்ப்பம்

லால்குடி அருகே திண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (வயது 22). இவர் லால்குடி பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகி வந்துள்ளார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். கர்ப்பம் அடைந்து 8 மாதம் ஆனநிலையில் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வல்லரசுவிடம் வலியுறுத்தினார். ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் லால்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி ஆகியோர் வல்லரசு மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

காவிரி ஆற்றில் முதியவர் பிணம்

* திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றின் கரையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் மீது தாக்குதல்

* திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (25). இவர் தனது நண்பர் வெற்றிவேலுடன் சோழராஜபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் இவரிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

* மண்ணச்சநல்லூர் அருகே உள்ள லட்சியம் குமரகுடி பகுதியை சேர்ந்தவர் கோகிலா (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.எம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற இவர் சத்திரம் பஸ் நிலையத்தில் இறங்கினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வாலிபர் கைது

* திருச்சி புத்தூர் ஆபிசர்ஸ் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் டாக்டர் சுஷ்மிதாபட் (27), இவர் திருச்சி விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் புகுந்து பொருட்களை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் அளித்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தென்னூர் இதாயத் நகரை சேர்ந்த அபுபக்கர்சித்திக் (28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்