வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் கைது

வந்தவாசியில் வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-20 17:35 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சலுகை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர், காஞ்சீபுரம் நெடுஞ்சாலை வழியாக பாதிரி கிராமம் செல்லும் வழியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 சிறுவர்கள் திடீரென மணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ேகட்டுள்ளனர்.

கொடுக்க மறுத்ததால் சிறுவர்கள், மணிகண்டனிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டது வந்தவாசி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 16 வயதுடைய சிறுவனை கைது செய்தனர். பின்னர் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்