நார்த்தம்பட்டியில் கஞ்சா விற்ற சிறுவன் கைது
நார்த்தம்பட்டியில் கஞ்சா விற்ற சிறுவன் கைது செய்யப்பட்டான்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம், நார்த்தம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது நார்த்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்த 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. பிடிபட்ட 17 வயது சிறுவன் நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதியமான்கோட்டை போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து, அவனிடம் இருந்த ரூ.500 மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.