உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு, கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து மணகெதி சுங்கச்சாவடி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.