சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

Update: 2023-06-08 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சலிப்பேரி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிஹரன்(வயது24). இவர் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ஹரிஹரனுக்கும், 15 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரன், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்