மதுபாட்டில்கள் விற்றவர் கைது

அரசூரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-04 19:06 GMT

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூரானூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (65) என்பவர் அரசூர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்