மதுபாட்டில்கள் விற்றவர் கைது
மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் காட்டுப்பையூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் கச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ஏழுமலை (வயது 40) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.