தொழிலாளிக்கு பாட்டில் குத்து
வாசுதேவநல்லூரில் தொழிலாளிக்கு பாட்டில் குத்து விழுந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி (வயது 42). தொழிலாளியான இவரும் கோட்டையூர் பசும்பொன் 2-வது தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் (36) என்பவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் வாசுதேவநல்லூரில் மதுஅருந்தும் போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிசாமி கழுத்து பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.