கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தொட்டுச் செல்லும் தண்ணீர்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தண்ணீர் செல்கிறது.

Update: 2022-08-28 20:06 GMT
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை வந்தடைந்ததும் இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீரும், முக்கொம்பில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மணல் வெளியாக காட்சியளித்த கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மணல் திட்டுகள் அகற்றும் பணி

இதுஒருபுறம் இருக்க கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதியை விரைந்து சென்றடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கல்லணை கால்வாயில் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் தரைத்தளம் அமைத்தல், கரைகளில் சிமெண்டு சாய்தளம் அமைத்தல், மதகுகள் சீரமைப்பு, கீழ் போக்கு பாலங்கள் சீரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கல்லணையில் உள்ள கல்லணை கால்வாய் தலைப்பு பகுதியில் இருந்து 250 மீட்டர் தூரத்திற்கு 4 ெபாக்லின் எந்திரங்கள் மூலம் மணல்மேடுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்