தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-09 19:40 GMT

அம்பை:

அம்பை நகர தி.மு.க. சார்பில் 10, 11, 12, 13, 14 ஆகிய வார்டுகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் ரோட்டில் 10-வது வார்டு கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நகர அவை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில தொண்டர் அணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமார் ஆதித்தன், நகர துணைச் செயலாளர் தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கே.கே.சி.பிரபாகரன் வரவேற்றார்.

கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. ஆவுடையப்பன் கலந்துகொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளை எவ்வாறு அமைப்பது?, அவர்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் ராமசாமி, பேச்சிக்கனியம்மாள், கோதர் இஸ்மாயில், மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வார்டு செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்