விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான ஒத்திகை முகாம்

ஜோலார்பேட்டையில் நடந்த மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றும் ஒத்திகை முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-23 18:10 GMT

கலெக்டர் தொடங்கி வைத்தார்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை ரேஷன் கடை பணியாளர்கள் நேரடியாக சென்று வினியோகம் செய்து வருகின்றனர். பின்னர் ரேஷன் கடைகளுக்கு அருகில் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு ஒத்திகை முகாம் நடந்தது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

18 வார்டுகளிலும்

மேலும் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வினியோகம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்