இலவச கொரோனா பூஸ்டர் தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை செலுத்தப்படும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-07-31 17:06 GMT

பூஸ்டர் தடுப்பூசி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது அரசு அறிவித்துள்ளவாறு, 2-ம் தவணை செலத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை செலுத்தப்படும்.

மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் 84 நாட்கள கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை.

நோய் தொற்று ஏற்படாது

கொரோனா நோய் தொற்று உறுதியானாலும் உயிர் சேதம், தீவிர நோய் தொற்று ஏற்படாது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்கள் வீட்டையும், சமுதாயத்தையும் பாதுகாத்து கொள்ள முடியும். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்துத்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தி கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்