பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா

பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2023-02-09 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கையில் 2-வது புத்தக திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 11 நாட்கள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய நிதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஏற்பாட்டில் புத்தக அரங்குகளில் இருந்து புத்தகங்களை பெற்று அவற்றை பள்ளிகளுக்கு வழங்க அறிவுறுத்தினார்.

அதன்படி காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை தாங்கினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி, வணிக ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி ஆசிரியை அமலதீபா வரவேற்றார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ராஜபாண்டி வாழ்த்துரை வழங்கினார். மதகுபட்டி துணை மின் நிலைய உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வழங்கினார். பள்ளி மாணவி காவியா புத்தக திருவிழாவின் அனுபவத்தை விளக்கி பேசினார்.

முடிவில் கணித பட்டதாரி ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்