போக்சோவில் பத்திர எழுத்தர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்திர எழுத்தர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-28 12:48 GMT

 நத்தம் தாலுகா குடகிப்பட்டி அருகே உள்ள குப்பிளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23). பத்திர எழுத்தர். இவர், 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினார்.

இதனையடுத்து வெங்கடேசன் மீது நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்