போகி பண்டிகை கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். அதன்படி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்த உபயோகமற்ற பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாய், துடைப்பம் உள்ளிட்டவற்றை தீயிட்டு எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தல் காரணமாக டயர்களை கொளுத்துவது சற்று குறைந்து காணப்பட்டது. இருப்பினும் கிராமங்கள்தோறும் ஒவ்வொரு வீட்டின் முன்பும் தேவையற்ற பொருட்களை தீயிட்டு கொளுத்தியதை காண முடிந்தது. இதனால் பல இடங்களில் கடும் புகை மூட்டமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்துடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்