ஏரியில் வாலிபர் பிணம்
உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் தீவிர விசாரணை
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேல்விழி கிராமத்தை சேர்ந்தவர் சவுரி மகன் அருள்மணி(வயது 34). இவர் உளுந்தூர்பேட்டை அருகே அலங்கிரி கிராமத்தில் உள்ள ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் விரைந்து வந்து அருள்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அருள்மணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.