கிணற்றில் பள்ளி மாணவி பிணம்

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பள்ளி மாணவி பிணமாக கிடந்தாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-10 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலி தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 13). தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து மாணவியை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் மாணவியின் செருப்பு மிதந்தது. இதைபார்த்த பெற்றோர், ராஜேஸ்வரி கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகமடைந்தனர். இது குறித்த தகவலின் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தேடினர்.

போலீசார் விசாரணை

அப்போது மாணவியின் உடலை அவர்கள் பிணமாக மீட்டனர். இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாணவி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்