பொள்ளாச்சி அருகேதனியார் விடுதி நீச்சல் குளத்தில் வாலிபர் பிணம்- கொலையா? போலீஸ் விசாரணை

பொள்ளாச்சி அருகே தனியார் விடுதி நீச்சல் குளத்தில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-09-18 20:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தனியார் விடுதி நீச்சல் குளத்தில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை அருகே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34). இவர், தனியார் சர்வீஸ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சீனிவாசன் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரில் உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்கு நண்பர்கள் சிலருடன் சுற்றுலா வந்தார். பின் நண்பர்களுடன் மது அருந்தினார். இதனை தொடர்ந்து நண்பர்களுடன் அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அனைவரும் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை சீனிவாசனை மட்டும் காணாததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீச்சல் குளத்தில் பிணம்

சந்தேகத்தின் பேரில் நீச்சல் குளத்தில் அவரை தேடி பார்த்தனர். அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் சீனிவாசன் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்்த அவர்கள் இதுபற்றி ஆழியாறு போலீசாருக்கும், சீனிவாசனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, நீச்சல் குளத்தில் பிணமாக கிடந்த சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சீனிவாசனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.

கொலையா?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீனிவாசன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா உள்பட பல்வேறு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்