பூத்துக்குலுங்கும் கொன்றை பூக்கள்
பெரிய கோவிலில் கொன்றை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் மரங்களில் இலைகள், பூக்கள் உதிர்ந்து பட்டமரம் போல் காட்சி அளித்து வருகிறது. ஆனால், தஞ்சை பெரிய கோவில் அகழி அருகே சிவனுக்கே உரிய கொன்றை பூக்கள் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கி, கோபுரத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் கண்கொள்ளா காட்சியை படத்தில் காணலாம்.